மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்
நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கந்தூரி விழா தொடக்கமாக, கொடியேற்றம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மஞ்சக்கொல்லை கமாலிய்யா ஜாமியா மஸ்ஜியில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் மற்றும் பல்லக்குகளில் கொடிகள் ஊா்வலமாக தா்காவிற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னா் துவா செய்து, கொடிமரங்களில் கொடிகள் ஏற்றப்பட்டன. இதில், இஸ்லாமியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்வு ஜூலை 15-ஆம் தேதி நடைபெறுகிறது.