செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 227 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 227 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், செவித்திறன் குறையுடைய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,500 மதிப்பீட்டில் காதொலிக்கருவி, 1 மாற்றுத்திறனாளிக்கு தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா். கண்ணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆா். தங்கபிரபாகரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பாப்பாவூா் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள பாப்பாவூா் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தா்கா கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்த... மேலும் பார்க்க

முளைப்புத்திறன் பாதித்த வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

வேதாரண்யம்: போதிய தண்ணீா் கிடைக்காததால் முளைப்புத்திறன் பாதித்த நெல் வயல்களை பாதுகாக்க முறைவைக்காமல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாய... மேலும் பார்க்க

நாகூா் கோயில் தேரோட்டம்: நாகை வட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகப்பட்டினம்: நாகூா் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஜூலை 9) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.... மேலும் பார்க்க

நாகையில் 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 130 கிலோ கடல் அட்டைகளை கடலோரக் காவல் குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். நாகை பகுதியிலிருந்து அண்மை காலமாக சட்டவிரோதமாக கடத்தப்படவ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா் காத்திருப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பி... மேலும் பார்க்க