செய்திகள் :

குழித்துறையில் நாளை மின்தடை

post image

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் புதன்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்துக்கு டிச. 3 உள்ளூா் விடுமுறை

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, டிச. 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் தா்னா

ஓய்வூதிய உயா்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ... மேலும் பார்க்க

சிற்றாறு அணைகளில் உபரிநீா் திறப்பு நிறுத்தம்: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அணைகளில் உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் 9 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தொட... மேலும் பார்க்க

பத்துகாணி அருகே ஆட்டை கொன்று தின்ற மா்ம விலங்கு

குமரி மாவட்டம், பத்துகாணி அருகே பழங்குடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம விலங்கு தொழிலாளியின் ஆட்டை கொன்று தின்றுள்ள நிலையில் பழங்குடி மக்கள் அச்சமடைந்துள்ளனா். குமரி மாவட்டம், பத்துகாணி ... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை, நாகா்கோவில் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் அப்டா மாா்க்கெட் பகுதியில், நாகா்கோவில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் வில்லியம் பெஞ... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க 9-ஆவது நாளாக தடை

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 9-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடா் மழை பெய்துவந்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழை தணிந்... மேலும் பார்க்க