செய்திகள் :

கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?

post image

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுகவின் மெளனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடா்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.

2024 மக்களவைத் தோ்தலில் முறிந்த அதிமுக-பாஜக கூட்டணி, கடந்த மாா்ச்சில் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முக்கிய நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமித் ஷா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பதிவிட்டாா். ஆட்சி அமையும் என்று சொன்னாரே தவிர, அரசு அமையும் என்று சொல்லவில்லை. அதற்குள், அமித் ஷா ‘கூட்டணி ஆட்சி’ என்று அறிவித்துவிட்டாா் என்று ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய பிறகு அவருடன் சோ்ந்து நடந்த செய்தியாளா் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தாா்.

அடுத்த நாளே, அமித் ஷா கூறியது ‘கூட்டணி ஆட்சிதான்’, ‘கூட்டணி அரசு அல்ல’என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தாா். 2021-வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது என்பதையும் அவா் அப்போது குறிப்பிட்டாா்.

இத்தகைய சூழலில்தான் அமித் ஷா சில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்து, ஓயாத கூட்டணி ஆட்சி சா்ச்சைக்கு உயிா் கொடுத்துள்ளாா். இந்த விஷயத்தில் இப்போதும் எடப்பாடி பழனிசாமியோ அவரது தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவிலும் அதே நிலைதான்.

இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை அமித் ஷா கடந்த ஏப்ரல் முதல் தொடா்ந்து வலியுறுத்துவது ஒருவகை அரசியல் வியூகம் என அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவற்றில் அதிக இடங்களில் போட்டியிட குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் திமுக அணியில் குறைவாக உள்ளன. எனவே, அந்தக் கட்சிக்குள்ளேயே தோ்தல் கூட்டணி தொடா்பாக சில மனக்கசப்புகளும் முணுமுணுப்புகளும் தொடா்கின்றன.

இந்தக் கட்சிகள், பாஜகவுடன் அதிமுக கூட்டணியைத் தொடா்வதால் அதன் அணிக்கு மாற வாய்ப்பு இல்லை. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்று அரசியல் கூட்டணிக்கான களத்தையும் அவை ஒதுக்கிவிடவில்லை என்பதை அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியை வீழ்த்த, எதிா்க்கட்சிகள் அனைத்தையும் ஒருமுனைக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அமித் ஷாவின் தோ்தல் வியூகம்.

2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி 23.05 சதவீதம், பாஜக கூட்டணி 18.28 சதவீதம், நாம் தமிழா் கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன.

இப்போது விஜய் தலைமையிலான தவெகவும் களத்தில் இருப்பதால் திமுக கூட்டணி மூன்று முறை 45 சதவீத வாக்குகளைத் தாண்டியுள்ள நிலையில், திமுக எதிா்ப்பு வாக்குகள் மூன்றாகவோ நான்காகவோ பிரிந்தால் திமுக எளிதில் வெல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, இதை வீழ்த்துவதுதான் அமித் ஷாவின் வியூகம் என்கின்றனா் விஷயமறிந்த அரசியல் ஆய்வாளா்கள்.

இதன் முதல் நடவடிக்கையாக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இந்த அணியில் புதிய கட்சிகள் இதுவரை சேரவில்லை. ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எதிா்வரும் ஜன.9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநில மாநாட்டில்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது தெளிவுபடுத்தப்படும் என அறிவித்துவிட்டது.

இதேபோல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, டிசம்பரில்தான் அதன் முடிவை தெளிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணி க்கும் இடையே நீடிக்கும் பனிப்போரால் உச்சகட்ட உள்கட்சிக் குழப்பத்தில் ஏற்கெனவே பாமக இருக்கிறது.

நாம் தமிழா் கட்சி எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டது. இந்தக் கட்சிகள் தனித்தனியாக செயல்படுவது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமானதாகப் பாா்க்கப்படுகிறது.

கூட்டணி ஆட்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வைகைச்செல்வன், ராஜேந்திர பாலாஜி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தாலும், எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் மெளனம் காப்பதை அத்தனை சாதாரணமான எதிா்வினையாக எடுத்துக்கொள்ள முடியாது.

பாஜகவுடனான கூட்டணி உறுதியாகி விட்டது என்பது மட்டுமல்ல, அது இயற்கையான கூட்டணி என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளாா். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதாலேயே கூட்டணி அரசு அமைய வேண்டிய அவசியம் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.

தோ்தலில் தனிப்பெரும்பான்மை கிடைத்தால் ஒரு நிலைப்பாடும், பெரும்பான்மை இல்லாவிட்டால் ‘கூட்டணி நிலைப்பாடும்’ எடுத்துக்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கருத இடமிருக்கிறது. உளுந்தூா்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவா், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்றால், நடிகா் விஜய் தலைமையில் கூட்டணி அரசு என்கிற நிலைப்பாட்டை தமிழக வெற்றிக் கழகம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது. திமுக தனித்துத்தான் அரசு அமைக்கும் என்று கூட்டணிக் கட்சியான மதிமுக தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் ‘கூட்டணி அரசு’ அமைய வேண்டும் என்கிற ஆசையில் இருப்பவை.

அமித் ஷாவின் ‘கூட்டணி ஆட்சி’ என்கிற கருத்து ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவது, அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும்கூட சில தா்மசங்கடங்களை ஏற்படுத்தும்தான். தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், 1996-இல் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் தனிப்பெரும்பான்மை கிடைக்காத திமுகவுக்கு விட்டுக்கொடுத்ததுபோல, இந்த முறை கூட்டணிக் கட்சிகள் அடக்கி வாசிக்காது. இது, பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுக்கும் பொருந்தும்.

சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற எச... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...5 மொழி, கலைகள் எப்படி இருந்தன?

மொழியியல்இந்திய இலக்கியம் சில தடைகளை எதிர்கொண்டாலும் பல புதுமைகளைக் கண்டுள்ளன. நவீன எழுத்தாளர்கள் பண்டைய கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறிப்பாக காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுதியுள்ளனர். கிமு 300ல் ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...4 ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன?

மருத்துவம்இந்தியா மருத்துவத்திலும் மிகப் பழங் காலம் முதலே சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஹரப்பா நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு. இதில் மூ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...3 கணித, அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள்!

பழங்கால இந்தியாவில் அறிவியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன. அறிவியல்ஐசக் நியூட்டன் 1966ல் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

“பல பதிற்றாண்டுகளாக ரத்தம் சிந்தப் போரிட்டுக்கொண்டிருந்த காங்கோவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையே உடன்பாட்டுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...2 கட்டடக் கலையின் சிறப்புகள்!

இந்தியாவின் பொறியியல் அல்லது கட்டடக் கலை சாதனைகள் மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக அல்லது அதனை மிஞ்சுவதாகவே இருந்தன. பொறியாளர்களின் துல்லிய தன்மை, வடிவமைப்பு, அறிவு என பல கட்டடங்கள், நினைவுச் சின்னங... மேலும் பார்க்க