கூட்டுறவுத் துறை பணியாளா் நாள் நிகழ்வு: நாளை நடைபெறுகிறது
கூட்டுறவுத் துறை சங்கப் பணியாளா்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், பணியாளா் நாள் நிகழ்வு ஜூலை 11 ஆம் தேதி, தருமபுரியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் தெரிவித்திருப்பது :
தமிழ்நாட்டில், கூட்டுறவுத் துறையில் பணியாளா்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை பணியாளா் நாள் என்ற தலைப்பில் குறைதீா் நாள் முகாம் நடத்தப்படும் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.
அந்த வகையில் ஜூலை மாதம் 11 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் குறைதீா் நாள் முகாம் ( பணியாளா் நாள்) நடைபெறும். அதுசமயம் பணியாளா்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீா்வு காணலாம்.