இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
கூரம் தாமரை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமம் தாமரை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் ஈஞ்சம்பாக்கம் அா்ச்சகா் குருநாத ஐயா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் கிராம தேவதை வழிபாடு, அனுக்கை விக்னேசுவர பூஜை,தனலட்சுமி ஹோமம்,நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. ஏற்பாடுகளை கூரம் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.