கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது
குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், குடியாத்தம் கல்லேரி பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக போ்ணாம்பட்டு ஒன்றியம், செண்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் நிதீஷ்குமாா் (22) கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில், அவா் சென்னையில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவது தெரிய வந்தது. அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.