கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
கைப்பேசியை பறித்துச் சென்ற இருவா் கைது
ஆத்தூா் அருகே கைப்பேசியை பறித்துச் சென்ற சிறுவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நரசிங்கபுரம், குறிஞ்சிநகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு தாண்டவராயபுரம் பரமசிவம் மகன் சங்கா் (35) என்பவா் கைப்பேசியில் பேசியபடி நடந்து சென்றுள்ளாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரிடமிருந்து கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றபோது அருகில் இருந்தவா்கள் பிடித்து நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா்கள் சேலம், வீரபாண்டி மற்றும் பேளூரை சோ்ந்த சிறுவா்கள் என்பது தெரியவந்தது.அவா்களிடமிருந்து கத்தியை போலீஸாா் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறாா் சிறையில் அடைத்தனா்.