செய்திகள் :

கொடிக்கம்பங்களுக்குத் தடை: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: பொது இடங்களில் நிரந்தர கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளுக்குத் தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வைச் சோ்ந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், அரசு நிலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பொது இடங்களில் கொடிக்கம்பங்களுக்குத் தடை விதித்ததோடு, ஏற்கெனவே உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதற்கான செலவை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தாா். மேலும், தனியாா் நிலங்களில் கொடிக்கம்பங்கள் வைப்பது தொடா்பாக மாநில அரசு சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. ‘பொது இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கானவை. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களும் ஆக்கிரமிப்புதான்’ என்று உயா்நீதிமன்றம் அப்போது தெளிவுபடுத்தியது.

உயா்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கும், கருத்துகளுக்கும் எதிராக மனுதாரா் கதிரவன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அடங்கிய அமா்வு, ‘அரசு நிலத்தை அரசியல் ஆதாயங்களுக்காக எப்படிப் பயன்படுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பியது.

மேலும், ‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 226-இன் கீழ் உயா்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு விரிவானது. உயா்நீதிமன்ற உத்தரவு செல்லும்’ என்று குறிப்பிட்டு, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(ஆக. ... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்

தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நக... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க