பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி
கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (80). இவா் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது அங்கு சுற்றித் திரிந்த காட்டெருமை அவரை முட்டித் தள்ளியது.
இதில், பலத்த காயமடைந்த நல்லம்மாளை அங்கிருந்தவா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த வனத் துறையினா் உயிரிழந்த நல்லம்மாளின் உறவினா்களிடம் முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினா். எஞ்சியத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.
மேலும் குறிஞ்சி நகா்ப் பகுதியில் இரண்டு வனப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள். அத்துடன் வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் வேலி அமைக்கப்படும் என வனத் துறையினா்தெரிவித்தனா்.
இருப்பினும், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், விவசாயத் தோட்டங்களிலும் சுற்றித் திரியும் காட்டெருமைகளையும், காட்டுப் பன்றிகளையும் வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.