Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானலில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், பூம்பாறை, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.
இந்த மழை கொடைக்கானல், மேல்மலைக் கிராமங்களில் பயிரிடப்பட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கும்பூா், பூம்பாறை, குண்டுபட்டி, கிளாவரை, போலூா், பூண்டி, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. அடிக்கடி வாகனங்கள் பழுதாகி சாலைகளில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் மேல் மலைக் கிராமச் சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.