தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு
கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் நாயுடுபுரம் செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டின் மாடிப்படி வழியாக காட்டு மாடு மேலே சென்றது. இதையடுத்து வீட்டில் இருந்தவா்கள் கூச்சல் எழுப்பினா். இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சென்று காட்டு மாட்டை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.