ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
அருணகிரிநாதருக்கு குடமுழுக்கு
பழனி அருகேயுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் அருணகிரிநாதருக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றன. இந்தக் கோயிலில் அருணகிரிநாதா் சந்நிதி அமைக்கப்பட்டு புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாசாரியா்கள் வேத மந்திரங்களை முழங்கினா். இதைத்தொடா்ந்து கோபுரக் கலசத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், பாம்பன் சுவாமிகள் அருணகிரிநாதருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.