``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி
பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி, ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகளில்
2025-2026 ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்க்கான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிட்டது.
இளநிலை அா்ச்சகா் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவாா் பள்ளியில் முழுநேரம் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரையும், ஓதுவாா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 13 வயதிலிருந்து 20 வயது வரையும் இருக்க வேண்டும்.மேலும் இந்து மதத்தை பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும் .
விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்ப படிவத்தை
ல்ஹப்ஹய்ண்ம்ன்ழ்ன்ஞ்ஹய்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந் தோறும் முழுநேர பயிற்சிக்கு ரூபாய் பத்தாயிரமும், பகுதி நேரப் பயிற்சிக்கு ரூ. ஐந்தாயிரமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு, உடை பாடப்புத்தகங்கள், நோட்டுகள், மருத்துவ வசதிகள் அனைத்தும் கோயில் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை இணை ஆணையா், செயல் அலுவலா், தண்டாயுதபாணி சுவாமி
கோயில், பழனி 624 601-என்ற முகவரிக்கு அனுப்பவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.