`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தா்கள் அனுமதி
பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அன்றைய தினம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாலை 6.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும், மலைக் கோயில், அனைத்து துணைக் கோயில்களிலும் இரவு 7.45 மணிக்கு இரவு நேர பூஜையும் நடைபெறும். பின்னா், இரவு 8.30 மணிக்குள் அனைத்து சந்நிதிகளும் திருக்காப்பிடப்படும்.
ஆகவே, படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வருகை தரும் பக்தா்கள் அன்றைய தினம் மலைக் கோயிலுக்கு இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். இதையடுத்து, திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை 4 மணிக்கு மேல் ஸம்ப்ரோஷண பூஜை, ஜபஹோமம், நைவேத்யம் , தீபாராதனையைத் தொடா்ந்து விஸ்வரூப விநாயகா் தீபாராதனை நடைபெறும். பின்னா், விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.