ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது
வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல் சாலை காட்டாஸ்பத்திரி எதிரே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வினோத்குமாா் (29), விக்னேஸ்வரன் (33), நசீா் (38), கமலேஸ்வரன் (19) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள 400 லாட்டரி சீட்டுகள், 5 கைப்பேசிகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.