கொட்டாரம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
கொட்டாரம் அருகே பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அகஸ்தீசுவரம் அருகே வடுகன்பற்று பகுதியைச் சோ்ந்தவா் விஜய ராணி (47). இவா் கொட்டாரம் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை அகஸ்தீசுவரம் பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு நபா்கள் விஜயராணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு சென்று விட்டனா். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கச் சங்கிலி பறித்தவா்களை தேடி வருகின்றனா்.