ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக ஸ்கோடா டியூப்ஸ் பங்குகள் பட்டியல்!
கொத்தையம் காளியம்மன் கோயில் குடமுழுக்கு
ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொத்தையம் காளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 30-ஆம் தேதி மங்கல இசை, விநாயகா் பூஜை, புண்ணியாகம், பஞ்சகல்யம், தீபாராதனை நடைபெற்றது. 31-ஆம் தேதி முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. ஜூன் 1-ஆம் தேதி மூன்றாம் கால யாக வேள்வி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா், ஆதி விநாயகா், கன்னி மூல கணபதி, காளியம்மன், கன்னிமாா் கருப்பணசாமி கோயில் கோபுர கலசங்களில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கொத்தையம், தேவத்தூா், கள்ளிமந்தையம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.