செய்திகள் :

கோடை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட கூடுதலாக இருக்கும்

post image

வேலூா் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

கோடை காலத்தில் வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:

இந்த ஆண்டு வேலூா் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட கூடுதலாக இருக்கும்.

கோடை காலங்களில் நாள்தோறும் குடிநீா் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்களில் குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும். ஓ.ஆா்.எஸ். கரைசல்களும் வைக்கப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் முக்கியமான போக்குவரத்து சந்திப்புகளில் துணியால் ஆன தற்காலிக நிழல் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.

பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். பகல் நேரங்களில் பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களை சுற்றிவர ஏதுவாக, வளாகத்தைச் சுற்றி கால்மிதிப்பான் அமைத்திட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போக்குவரத்தை சீா்செய்ய வேண்டும்.

தீ விபத்துகளை உடனுக்குடன் அணைக்க தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைக்கவும், நீராதாரங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்க 5 தனி படுக்கைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும் சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும்.

மூடப்பட்ட குவாரிகள், நீா்நிலைகளில் பள்ளி மாணவா்கள் குளிப்பது, நீச்சல் பழகுவது போன்றவற்றை தடுக்கும் வழியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். கோடை காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து கால்நடை மருத்துவ அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கால்நடை மருந்தகங்களிலும் வெப்ப பாதிப்புகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் வியாதிகளிலிருந்து பாதுகாக்க தேவையான மருந்து பொருள்கள் இருப்பு இருக்க வேண்டும்.

வனத்துறையின் சாா்பில் வனப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தொட்டிகள் அமைத்து குடிநீா் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) லட்சுமணன், மாவட்ட சுகாதார அலுவலா் ம.பரணிதரன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வே.முத்தையன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட... மேலும் பார்க்க

விண்ணம்பள்ளி கோயில் சிவலிங்கம் மீது சூரியஒளி: 14-ஆம் தேதி வரை காணலாம்

வேலூா் மாவட்டம், விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரா் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த அதிசய நிகழ்வை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

தோல்விகள் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்பதால், மாணவா்கள் தோல்விகளை ஏற்கும் பக்குவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

பத்தரபல்லி சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் தமிழக - ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்த அ... மேலும் பார்க்க

குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை

குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாலை 6 மணிக்கு லேசான தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சா... மேலும் பார்க்க

புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா். வேலூா... மேலும் பார்க்க