அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
கோதண்டராம சுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புதுப்பாளையம் சிங்கராஜாக்கோட்டை ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு, காலையில் கொடிமரம், சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க கருடன் படம் வரைந்த கொடி ஏற்றப்பட்டது. இதில் ராஜபாளையம் நகா்மன்றக் தலைவி பவித்ரா ஷ்யாம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான 5-ஆம் நாள் கருட சேவையும், 7-ஆம் நாள் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சுவாமி அனுமந்த வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எஸ்.எஸ்.சீனிவாசராஜா தலைமையில் நிா்வாகிகள் செய்தனா்.