செய்திகள் :

கோத்தகிரி: நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய கணவன்; கர்ப்பிணி மனைவி கண்முன்னே நொடியில் நடந்த துயரம்!

post image

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான செந்தில்குமார். இவரின் மனைவி மோனிஷா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு நத்திஷ்குமார் என்ற பெயரில் இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், பெயிண்ட்டிங் வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வந்திருக்கிறார் செந்தில் குமார்.

மனைவி மோனிஷாவை மருத்துவ பரிசோதனைக்காக அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேற்று காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அதே காரில் மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

உயிரிழந்த செந்தில்குமார்

அப்போது, சாலையோரத்தில் இருந்த நாவல் மரம் ஒன்றில் கொத்துக் கொத்தாக நாவல் பழங்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டிருக்கிறார் செந்தில்குமார். காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, நாவல் மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கத்தொடங்கியிருக்கிறார். திடீரென நிலைத்தடுமாறி மரத்தில் இருந்து கீழே பாறை மீது விழுந்திருக்கிறார் செந்தில்குமார்.

இதைக் கண்டுப் பதறிய மனைவி மோனிஷா அலறித்துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த செந்தில்குமாரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால், வரும் வழியிலேயே செந்தில்குமாரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய செந்தில்குமார் நிறைமாத கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே நொடியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Ahmedabad Plane Crash: 'ஏர் இந்தியா இந்த ஆய்வைச் செய்யவில்லை' - முதல்கட்ட அறிக்கை தகவல்

கடந்த ஜூன் 12-ம் தேதி, அகமதாபாத்தில் போயிங் 747 விமான விபத்து ஏற்பட்டது. இந்த விமானத்திற்கான முதல்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.எரிவாயுவில் எதாவது பிரச்னையா? விமானத்தில் இருந்து எரிவாயு சுத்தமா... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'அது சரியாக வேலை செய்யவில்லை; காரணம்...' - முதல்கட்ட அறிக்கை சொல்வது என்ன?

அகமதாபாத் விமான விபத்தின் முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது விமான விபத்து விசாரணைப் பணியகம்.அந்த அறிக்கையில், "விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இரு இன்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிவாயு நின்றுள்ளது... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது முதல்கட்ட அறிக்கை

அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 747 விமான விபத்து கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது. இதில் பயணம் செய்த ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தின் ஆய்வு செய்... மேலும் பார்க்க

Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?

ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன. வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இ... மேலும் பார்க்க

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க