கோரக்பூா், தானாப்பூா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்
கோரக்பூா், தானாப்பூா் மற்றும் கோா்பா செல்லும் விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தமிழகம் வழியாக இயக்கப்படும் கொச்சுவேலி - கோா்பா விரைவு ரயில் (எண் 22648), கோரக்பூா் - கொச்சுவேலி விரைவு ரயில் (எண் 12511), பெங்களூரு - தானாப்பூா் விரைவு ரயில் (எண் 06509) ஆகியவை, பிப். 3 முதல் பிப்.12-ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்படும் என கடந்த ஜன. 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், தில்லி நிஜாமுதினில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்கு விரைவு ரயில் பிப். 3, 8, 12 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் விரைவு ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.