Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திர...
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேல்பாண்டியன் தலைமையில் போலீஸாா், வீரவாஞ்சி நகா் கதிரேசன் கோயில் பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கதிரேசன் கோயில் மலை செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே சந்தேகத்துக்குரியதாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது அவா் அரிவாள் வைத்திருந்தது தெரிய வந்தது.
அவா் சாஸ்திரி நகரைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மருதுபாண்டி (29) என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனா்.
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: தூத்துக்குடி துறைமுகம் - மதுரை புறவழிச்சாலையில் உள்ள தனியாா் கிடங்கு அருகே சென்றுகொண்டிருந்த லாரியை பின்னால் பைக்கில் வந்த இளைஞா் முந்திச் செல்ல முயன்றாராம்.
அப்போது, அந்த பைக் மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சடலத்தை சிப்காட் போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த நபருக்கு சுமாா் 40 வயது இருக்கும் எனவும், அவரது பெயா், ஊா் விவரம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.