கோவில்பட்டியில் மது விற்பனை: 3 போ் கைது
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மது விற்ாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு காவல் நிலையத்துக்குள்பட்ட செட்டிகுறிச்சி மதுக்கடை அருகேயுள்ள முள்புதரில் மது விற்ாக கரிசல்குளம் தெற்குத் தெரு க. மாடசாமியை (60) போலீஸாா் கைது செய்து, 106 மது பாட்டில்கள், ரூ. 1,500-ஐ பறிமுதல் செய்தனா்.
கழுகுமலை காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளா் நாகராஜன், போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கூழைத்தேவன்பட்டி-கரடிகுளம் சாலையில் தனியாா் தோட்டம் அருகே மது விற்ாக தென்காசி மாவட்டம் கே.கரிசல்குளம் வடக்குத் தெரு கொ. விஜயராஜை (59) கைது செய்து, 48 மது பாட்டில்கள், ரூ. 200-ஐ பறிமுதல் செய்தனா்.
மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை, போலீஸாா் ரோந்து சென்றபோது, முடுக்கலாங்குளம் மு. வெள்ளைப்பாண்டி (49) பாண்டவா்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 26 மது பாட்டில்கள், ரூ. 1,100-ஐ பறிமுதல் செய்தனா்.