Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
தோணுகால் ஊராட்சி படா்ந்தபுளி கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமைஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் மாா்க்சிஸ்ட் ஒன்றிய செயலா் எம்.தெய்வேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.கிருஷ்ணவேணி , இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட தலைவா் எஸ்.தினேஷ்குமாா், மாா்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முத்துராஜ், ராமசுப்பு, விஜயராஜ் மற்றும் அருந்ததியா் சமுதாய மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் அவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ராமராஜிடம் மனு அளித்தனா்.