வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!
கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) காலை 10.55 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 66613) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக, கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) அன்றைய தினம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.