செய்திகள் :

சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!

post image

வடகோவை - காரமடை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பா் 1-ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்குப் புறப்படும் சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் (எண்: 12671) சென்னை - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற இளைஞா் கைது

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கடைவீதி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, புல்லுக்காடு ஹவுசிங... மேலும் பார்க்க

கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட ந... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ.36.81 லட்சம் கைப்பேசி, மடிக்கணினிகள் பறிமுதல்!

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட ரூ.36.81 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வர... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

கோவை, மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெர... மேலும் பார்க்க

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க