கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே ப...
சகுனி! முதல்முறையாக மோதிக் கொண்ட முத்துக்குமரன் - மஞ்சரி!
பிக் பாஸ் சீசன் 8 இல் முதல்முறையாக முத்துக்குமரனும் மஞ்சரியும் மோதிக் கொண்டனர்.
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் போட்டி 13-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியின் முக்கியமான ’டிக்கெட் டூ பைனல்’ (நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்) போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதல் சுற்றில் ராணவும் அருண் பிரசாத்தும் தலா இரண்டு புள்ளிகள் பெற்றனர். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில், இரண்டாம் சுற்றின் முதல்நிலையில் சிறப்பாக விளையாடிய ரயான் 5 புள்ளிகளை பெற்றார். இந்த சுற்றின் இரண்டாம் நிலையில் 5 ஆண் போட்டியாளர் இணைந்து ரயானை குறிவைத்து போட்டியிலிருந்து வெளியேற்றினர்.
இதையும் படிக்க : புத்தாண்டில் காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் நடிகை!
இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தன்னைக் கண்டு பயந்ததால்தான் 5 பேர் சேர்ந்து வெளியேற்றியதாக முத்துகுமரனிடம் ரயான் முறையிட்டார்.
இதனிடையே, இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், போட்டியாளர்கள் உரையாடலின்போது பழைய பிரச்னையை மஞ்சரி எழுப்பியதால் முத்துகுமரன் கோபமடைந்தார்.
சகுனி வேலையை பார்க்காதே என்று மஞ்சரியை நோக்கி முத்துக்குமரன் கூற, வாக்குவாதமாக மாறியது.
இந்த சீசன் தொடங்கியது முதல் முத்துக்குமரனுக்கு மக்களின் பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது. வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்த மஞ்சரி, முத்துக்குமரின் நெருங்கிய தோழி ஆவார்.
இவர்கள் இருவருக்கும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெரியளவிலான கருத்து வேறுபாடுகள் வந்ததில்லை. முதல்முறையாக இருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது விளையாட்டில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.