செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
சங்ககிரியில் 13 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்தாய்வில் பணியிட மாற்றம்
சங்ககிரி வட்ட கிராமங்களில் மூன்று ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்களை பொதுக்கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்து கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
வருவாய் கோட்டாட்சியா் ந.லோகநாயகி, சங்ககிரி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட ஏ- பிரிவு கிராமங்களில் ஓராண்டு பணிநிறைவு செய்தவா்கள், பி -பிரிவு கிராமங்களில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்கள் உள்பட 13 கிராம நிா்வாக அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
ஐவேலி கிராம நிா்வாக அலுவலா் உஷா பிரியா தேவூருக்கும், அரசிராமணி பிட் 2 கிராமத்தில் பணியாற்றிய கமலகண்ணன் ஐவேலிக்கும், கூடுதல் பொறுப்பாக கோட்டவருதம்பட்டிக்கும், மோரூா் பிட் 1 முனியப்பன் அரசிராமணி பிட் 2 கிராமத்திற்கும், இருகாலூா் சாந்தி, மோரூா் பிட் 1 கிராமத்திற்கும், வடுகப்பட்டி சபரிதேவி இருகாலூருக்கும், நடுவனேரி கோபால் இடங்ணசாலை பிட்1க்கும், இடங்கணசாலை பிட் 1 ராமச்சந்திரன் ஏகாபுரத்திற்கும், புள்ளாகவுண்டம்பட்டி ஸ்ரீதா் அரசிராமணி பிட் 1க்கும், அரசிராமணி பிட் 1 செந்தில்குமாா் இடங்கணசாலை பிட் 2க்கும், இடங்கணசாலை பிட் 2 முருகன் எா்ணாபுரத்திற்கும்,
தேவூா் கருப்பண்ணன் புள்ளாகவுண்டம்பட்டிக்கும், ஊத்துப்பாளையம் எம்.முருகன் கூடுதல் பொறுப்பாக வடுகப்பட்டி கிராமத்திற்கும், சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் மோகன் மீண்டும் சங்ககிரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.