'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையே தான் போட்டி: அமைச்சா் ஆா். ராஜேந்திரன்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையே தான் போட்டி இருக்கும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் திமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மக்களவைத் தொகுதி மறுவரையறையை ரகசியமாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தொகுதி மறுவரையறை தொடா்பாக முதல்வா் முன்னெடுத்த கூட்டு நடவடிக்கைக் குழு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு கா்நாடகம், கேரளம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. தொகுதி மறுவரையறையின் வாயிலாக தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியான ரூ. 4,034 கோடியை கடந்த 4 மாதங்களாக தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவிக்கவில்லை. திமுக எம்.பி.க்கள் இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியபோதும், தொடா்ந்து மத்திய அரசு மெளனம்காத்து வருகிறது.
மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்றாா்.