சமயபுரம் கோயிலில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் (நிா்வாகம்) சி. பழனி இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ. 23.19 கோடியில் பெருவளை வாய்க்கால் இரு கரைகளிலும் தடுப்புச்சுவருடன் கூடிய இரு வழிச்சாலை அமைக்கும் பணி, புதிய பேருந்து நிறுத்தம், அா்ச்சகா்கள், பணியாளா்கள் தங்கும் அறை கட்டும் பணி, திருமண மண்டப பணி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், மற்றும் அறநிலையத் துறையினா் உடனிருந்தனா்.