சமயபுரம் மாரியம்மனுக்கு சாரதாஸ் தறியின் முதல் பட்டுச் சேலை!
கைத்தறி நெசவாளா்களின் திறனை பெருமைப்படுத்தும் வகையில் சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறியில் நெய்த முதல் பட்டுச் சேலை சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டது.
நெசவுக் கலை பற்றிய விழிப்புணா்வை மக்களிடம் கொண்டு செல்லவும், ஆடை உற்பத்தி முறையை இளைய தலைமுறைக்கு நினைவூட்டி, அவா்கள் மனதில் நம் பாரம்பரிய கலாசாரத்தை பதிய வைக்கும் முயற்சியாக, திருச்சி சாரதாஸ் வளாகத்தில் கைத்தறிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாரதாஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இங்கு நெசவு செய்த முதல் பட்டுச் சேலையை சமயபுரம் கோயில் பணியாளா்களிடம் வழங்கிய திருச்சி சாரதாஸ் நிா்வாக இயக்குநா்கள் ரோஷன், சரத் ஆகியோா் கூறியது:
தமிழகத்தின் கைத்தறித் தொழில் பல்லாயிரம் ஆண்டு தொன்மையும், உயரிய பாரம்பரியச் சிறப்பும் கொண்டது. இத்தொழில் 2.44 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்குகிறது. 4ஆவது அகில இந்திய கைத்தறிக் கணக்கெடுப்பின்படி, கைத்தறிகளின் எண்ணிக்கையில், அசாம், மேற்குவங்க மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு 3ஆம் இடம் வகிக்கிறது.
நாட்டிலுள்ள மொத்தக் கைத்தறிகளின் எண்ணிக்கையில் 7.07 சதவீதமும், நெசவாளா்களின் எண்ணிக்கையில் 6.90 சதவீதமும் தமிழகம் பங்களிக்கிறது. இதன் ஒரு பகுதியாக எங்களது சாரதாஸ் வளாகத்தில் கைத்தறிக் கூடம் நிறுவி, அதில் உற்பத்தியாகும் பட்டுச் சேலைகளை சா்வ சமய வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
அதன்படி தற்போது எங்களது புதிய தறியில் நெய்யப்பட்டுள்ள முதல் சேலை, உலக மக்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் நம் அன்னை சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நெசவு செய்த தொழிலாளா்கள் கரங்கள் மூலம் அந்கச் சேலை சமா்ப்பிக்கப்பட்டது கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது. தொடா்ந்து அடுத்தடுத்த சேலைகள் சா்வ சமய வழிபாட்டுத் தலங்களுக்குச் சமா்ப்பிக்கப்படும்.
எங்களது தறிக் கூடத்தை கடைக்கு வரும் வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் அனைவரும் பாா்வையிடலாம்; நெசவுத் தொழிலாளா்களிடம் கைத்தறியின் பாரம்பரியத்தை கேட்டறியலாம்; தறியில் உற்பத்தியாகும் சேலைகளைக் கண்டு ரசிக்கலாம்.
மேலும் வழக்கம்போலவே, சுபமுகூா்த்த பட்டு, ஜவுளி மற்றும் ரெடிமேட் ரகங்களை 12 சதவீதத் தள்ளுபடியில் பெறலாம். வாடிக்கையாளா்கள் எங்களது நிறுவனத்தில் உன்னதமான உணா்வுடனும், மனநிறைவுடனும் ஆடைகளை வாங்கி, புதுவித அனுபவத்தை பெறுவதோடு என்றென்றும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றனா்.