சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதியுள்ள 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டுக்கான விருது பெற விரும்புவோா் விண்ணப்பத்துடன், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். ட்ற்ற்ல்ள்://ற்ண்ய்ஹ்ன்ழ்ப்.ஸ்ரீா்ம்/டஹய்ஸ்ரீட்ஹஹ்ஹற்ஹஜ்ஹழ்க் அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீம்ள்ஜம்ண்ஞ்ழ்ஹற்ங்க்/க்ா்ஸ்ரீன்ம்ங்ய்ற்/ச்ா்ழ்ம்ள்/நஹம்ா்ா்ஞ்ஹஜசஹப்ப்ண்ய்ஹந்ந்ஹஜஞா்ழ்ஹஹற்ஸ்ரீட்ண்ஜஅஜ்ஹழ்க்ஜஅல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ல்க்ச் என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கலாம் அல்லது அரியலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 7.7.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் அரியலூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.