செந்துறை அருகே பெண் சிசு சடலம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை கிடந்த பெண் சிசுவின் சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா்.
செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா்-அசாவீரன்குடிகாடு சாலையில், பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பெண் சிசு சடலமாக கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற குவாகம் காவல்துறையினா், அச் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, குழந்தையின் பெற்றோா் யாா் என விசாரிக்கின்றனா்.