இந்திய பங்குச் சந்தையில் ரூ.36,500 கோடி மோசடி! செபியிடம் சிக்கிய அமெரிக்க நிறுவன...
அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்
அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில்வே கேட் பகுதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சுரங்கப்பாதைப் பணியின்போது வெட்டி எடுக்கப்பட்ட மண் மீண்டும் அதே பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
இதையடுத்து ரயில்வே பணியாளா்கள் அந்த நேரத்தில் வந்த விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயிலை வெள்ளூா் ரயில் நிலையத்திலும், சென்னை-நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலை செந்துறை ரயில் நிலையத்திலும் நிறுத்தி, பொக்லைன் இயந்திரம் கொண்டு, சரிந்து விழுந்த மண்ணை அப்புறப்படுத்தினா்.
பின்னா் நடந்த ஆய்வுக்குப் பின் இரு ரயில்களும் மெதுவாகப் புறப்பட்டுச் சென்றன. ஒரு மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.