அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு
அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அரியலூா் நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்து மையத்தை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில் அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், மாவட்ட சுகாதார அலுவலா் மணிவண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.