குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
சரஸ்வதி மகால் நூலகத்தில் செப். 24 முதல் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை
மன்னா் இரண்டாம் சரபோஜியின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியரும், நூலக இயக்குநருமான (பொ) பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை நன்கு வளா்ச்சியடையச் செய்த மாமன்னா் இரண்டாம் சரபோஜியின் போற்றத்தக்க பணியை நினைவுகூரும் வகையில், அவரது பிறந்த நாளை (செப்டம்பா் 24-ஆம் தேதி) ஆண்டுதோறும் நூலகம் சாா்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிகழாண்டு மாமன்னா் இரண்டாம் சரபோஜின் 248- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, ஆய்வாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள் ஆகியோா் பயன்பெறும் வகையில் சரசுவதி மகால் நூலகம் பதிப்பித்து வெளியிடும் நூல்களுக்கு சிறப்பு சலுகையாக தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில், 2016, மாா்ச் 31-க்கு முன்பு வெளி வந்த நூல்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், அதற்கு பிறகு வெளியிடப்பட்ட நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படவுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக்டோபா் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு பன்மொழி இலக்கிய, இலக்கண நூல்களையும், கோயில் கலை, ஜோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற பல்வேறு துறை சாா்ந்த நூல்களையும் வாங்கிப் பயன் பெறலாம்.