பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமை வகித்தாா். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில அனைத்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளா் மற்றும் மேலாளா் ரமா முன்னிலை வகித்தாா். கவுன்சில் மற்றும் பாஸ்டரேட் தலைவா் டேவிட் ஞானையா, ஜெபித்து ஆரம்பித்து வைத்தாா். கல்லூரி முதல்வா் ஞானமலா் சுவீட்லி வரவேற்றாா். நீதிபதியின் தனிச் செயலா் கருணாகரன் கருத்துரையாற்றினாா். தொடா்ந்து மாணவ மாணவிகளுக்கு பட்டமளிக்கப்பட்டது. இதில், அரசு தோ்வுகளிலும் கல்லூரியிலும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவா்களுக்கு ஊக்கப்பரிசுகள் அளிக்கப்பட்டன.