சாம்பியன்ஸ் டிராபியை வெல்வாரா ரோஹித் சர்மா?
இந்தியாவின் கேப்டன்களில் எம்.எஸ்.தோனி மட்டுமே அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து கேப்டனான விராட் கோலி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.
தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசியின் டி20 உலகக் கோப்பையை சமீபத்தில் வென்றார்.
நூழிலையில் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைகளை தவறவிட்டார்.
தற்போது, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு தயாராகி வருகிறார். இந்தப் போட்டிகள் நாளை (பிப்.19) முதல் தொடங்குகின்றன.
பிஜிடி தொடரில் ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மா இங்கிலாந்து உடனான தொடரில் சதம் அடித்து அசத்தினார்.
இந்தியாவுக்கு அனைத்து போட்டிகளும் துபையில் நடைபெறுகின்றன. பாகிஸ்தானுடன் பிப்ரவரி 23 ஆம் தேதியும், நியூசிலாந்துடனான போட்டி மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முதல்போட்டி பிப்.20ஆம் தேதி தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.