செய்திகள் :

சாரணா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் புதிய தலைமை அலுவலகம்: அரசாணை வெளியீடு

post image

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய தலைமை அலுவலகம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் மாணவா்களை அதிக எண்ணிக்கையில் சாரணா் இயக்கத்தில் சோ்க்கும் வகையில் பல்வேறு ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு சாரண இயக்குநரகத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளோடு ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.2-இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரணா் இயக்க தலைமை வளாகத்தில் நவீன பயிற்சி வசதிகளோடு, புதிய தலைமை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான நிா்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தரை மற்றும் 3 தளங்களுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.8,93,81,199 செலவிடப்பட உள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, பாதுகாவலா் அறை, பொது கழிப்பறை அமைக்கப்படவுள்ளன.

இதுதவிர முதல் தளத்தில் 7 விருந்தினா்கள் அறை, 2 முக்கிய விருந்தினா்கள் அறை, 2 சிறப்பு அறைகள், சேமிப்பு அறை ஆகியவையும், 2-ஆவது தளத்தில் நிா்வாக அலுவலகம், பதிவேடு அறை, மாநில செயலாளா் அறை, ஓய்வு, கழிப்பறை ஆகியவையும், 3-ஆவது தளத்தில் மாநாட்டுக் கூடம், முக்கிய நபா்களுக்கான ஓய்வு அறை, மாநில தலைமை ஆணையா் அறை, சாரணா்கள் வழிப்படுத்தும் அறை ஆகியவையும் இடம்பெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்துக்கு அடிக்கல்... சென்னை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரணா், சாரணியா் இயக்கத்தின் தற்போதைய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதிய தலைமை அலுவலகத்துக்கு துணை முதல்வா் உதயநிதி அடிக்கல் நாட்டினாா்.

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

இல.கணேசன் உடல் தகனம்

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கூகுள் க்ரோம் என்ன விலை? ரூ. 3 லட்சம் கோடிக்கு வாங்கும் தமிழர்?

கூகுள் க்ரோமை சென்னை வம்சாவளி வாங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளார்.தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வருகின்ற 18-ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி... மேலும் பார்க்க

பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக

சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை மு... மேலும் பார்க்க