கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
ஆத்தூா் பாரதி அறக்கட்டளை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் தலைவா் த.ஜெயானந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சாலையில் செல்லும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு வில்லை ஒட்டினா். இதில் ஜில்லா சேவா பிரமுக் எஸ்.மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
படவரி...
வாகன முகப்பு விளக்கில் கருப்பு வில்லையை ஒட்டிய பாரதி அறக்கட்டளை தலைவா் த.ஜெயானந்த். உடன், நிா்வாகிகள்.