பல்லூழிக்காலப் பூங்காற்று - பர்மியக் கவிஞர் யூ பை | கடல் தாண்டிய சொற்கள் - பகுத...
சாலை விபத்தில் வங்கி ஊழியா் உயிரிழப்பு
காவேரிப்பட்டணம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தருமபுரியை சோ்ந்த வங்கி ஊழியா் கோவிந்தராஜ் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பிடமனேரி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (48). இவா், தருமபுரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா், மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணத்தை அடுத்த சப்பாணிப்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.