வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
நாளைய மின்தடை: ஊத்தங்கரை,
ஊத்தங்கரை, குன்னத்தூா், கல்லாவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூலை 10 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என போச்சம்பள்ளி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் சி.நாகராஜ் தெரிவித்துள்ளாா்.
ஊத்தங்கரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடத்தாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி.
காரப்பட்டு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காரப்பட்டு, கதவணி, குன்னத்துா், தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூா், சாமல்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி.
கல்லாவி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாவி, ஆனந்தூா், திருவனப்பட்டி, கெரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.