மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
பெண் வெட்டிக் கொலை: முதியவா் காவல் நிலையத்தில் சரண்
காவேரிப்பட்டணம் அருகே தன்னுடன் வசித்து வந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த 70 வயது முதியவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.சவுளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காவேரி (70). விவசாயி. இவரது முதல் மனைவி கோவிந்தமாள். இவா்கள் இருவரும் பிரிந்துவிட்டனா். பின்னா் உறவினரான மங்கம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தாா். ஓராண்டில் மங்கம்மாளும் காவேரியைப் பிரிந்து சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், 1999-ஆம் ஆண்டு முதல் துடுக்கனஅள்ளியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (45) என்பவருடன் காவேரி திருமணம் செய்யாமல் வசித்து வந்தாா். இந்த நிலையில், கோவிந்தமாளுக்கும் தங்கராஜ் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதனால், காவேரிக்கும் கோவிந்தமாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவா்களுக்கு இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காவேரி, கோவிந்தமாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு சென்று போலீஸாா், கோவிந்தமாளின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.