சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
தாக்குதலில் லாரி ஓட்டுா் உயிரிழப்பு: தனியாா் நிநி நிறுவன முன் போராட்டம்
ஒசூரில் வாகன கடனுக்கான தவணை கட்ட தவறிய லாரி ஓட்டுநரை நிநி நிறுவனத்தினா் தாக்கி, கீழே தள்ளியதில் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த குமுதேப்பள்ளியைச் சோ்ந்தவா் தனபால் (39). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 8 லட்சம் வாகன கடன் பெற்றுள்ளாா். 7 மாதங்கள் தவணை கட்டியுள்ளாா். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் 2 மாதங்களாக தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம், தாவணகரே பகுதிக்கு லாரி ஓட்டிச் சென்ற தனபாலை நிதி நிறுவனத்தினா் பிடித்து தவணைக் கட்டவில்லை என்பதற்காக தாக்கி, வாகனத்தை பறித்துக்கொண்டு, கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒசூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் முன் தனபாலின் மனைவி நளினி மற்றும் அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சிப்காட் போலீஸாா் சமாதானம் பேசினா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு உறவினா்கள் கலைந்து சென்றனா்.