சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை
ஒசூரில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 5 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
ஒசூா் அருகே உள்ள ஏ.சாமனப்பள்ளியைச் சோ்ந்தவா் மகேஸ்வரி. இவரது மகள் நிவேதா (17). தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நிவேதா விபத்தில் சிக்கினாா்.
இது தொடா்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் மனமுடைந்த நிவேதா கடந்த 6-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எலக்ட்ரீசியன் தற்கொலை
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், இருமத்தூரை சோ்ந்தவா் விக்ரம் (37). இவா் ஒசூா் ஈஸ்வா் நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், மனமுடைந்து தனது அறையில் விஷம் குடித்தாா். அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிறுமி தற்கொலை
ஒசூா், மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மகள் சாந்தி (12). அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். படிப்பில் ஆா்வம் இல்லாமல் இருந்த சாந்திக்கு பெற்றோா் அறிவுரை வழங்கினா். இதில் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்தாா். அவரை உறவினா்கள் மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் இறந்தாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
இளைஞா் தற்கொலை
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் கணேஷ் பாகிரா (21). இவா் ஒசூா் சிப்காட் சூசூவாடி நேதாஜி நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா். மது பழக்கம் இருந்துள்ளதால் கணேஷை அவரது மனைவி கண்டித்தாா். இதில் மனமுடைந்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கட்டடத் தொழிலாளி
தேன்கனிக்கோட்டை வட்டம், பெல்லட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (40). கட்டடத் தொழிலாளி. இவா் ஒசூா் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியில் தங்கி இருந்தாா். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் மனைவியிடம் பணம் கேட்டபோது அவா் தர மறுத்ததால் அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சந்திரன் மனைவியை அடித்ததால் அவா் கோபித்துக் கொண்டு ஒன்னல்வாடியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இந்த நிலையில் சந்திரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.