Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு
கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது.
கடந்த தென்மேற்குப் பருவமழையின்போது பந்தலூா் முதல் தேவாலா வரை உள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையை முறையாக சீரமைக்காமல் மண் மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
கூடலூா் நகரில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் பந்தலூா் செயலாளா் பெரியாா் மணிகண்டன், மாவட்டச் செயலாளா் ராசி ரவிக்குமாா் , ஏரியா தலைவா் செரிப், கமிட்டி உறுப்பினா் ரபீத், மாா்க்சிஸ்ட் கட்சியின் புளியம்பாறை கிளை செயலாளா் சுபையா் உள்ளிட்ட நிா்வாகிகள் இந்த மனுவை அளித்தனா்.