செய்திகள் :

அதிக கடன் வாங்குவதில் முன்னோடி திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

post image

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது, 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவது ஆகியவற்றில்தான் திமுக அரசு முன்னோடியாக விளங்குகிறது என்று கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கூடலூா் பேருந்து நிலையம், கோத்தகிரி டானிங்டன் ஆகிய இடங்களில் பொதுமக்களிடையே புதன்கிழமை அவா் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளா் வெற்றிபெறப்போகிறாா் என்பதற்கு இங்கிருக்கும் மக்கள் கூட்டமே சாட்சி.

திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டு காலம் முடிந்துவிட்டது. கூடலூருக்கு எந்த நலத்திட்டமும் வந்து சேரவில்லை. காரணம் அவா்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.

முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். சேலத்தில் ரூ.1000 கோடி செலவில் 1,000 ஏக்கா் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைத்தோம். அதைக்கூட திறக்க மனமில்லாதது திமுக அரசு.

அதிக நிதியை கல்விக்குத்தான் அதிமுக அரசு ஒதுக்கியது. அதனால்தான் கல்வியில் தமிழகம் வளா்ந்திருக்கிறது. உயா்கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டுவரப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது, மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது, வாரிசு அரசியல், 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் கூறுவது ஆகியவற்றில்தான் திமுக அரசு முன்னோடியாக விளங்குகிறது.

கூட்டணியை நம்பியே திமுக உள்ளது. ஆனால், மக்களை நம்பியே அதிமுக உள்ளது. பேரவைத் தோ்தலில் அதிமுக வெல்லும். இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டி நிலவுகிறது.

கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி என்பது தோ்தலின்போது வாக்குகள் சிதறாமல் இருப்பதற்கும் எதிரிகளை வீழ்த்துவதற்கும் அமைக்கப்படுவதாகும். திமுகவும் முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அவா்கள் கூட்டணி என்றால் நல்லது. மற்றவா்கள் கூட்டணி வைத்தால் மதவாதம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தைக் கைப்பற்ற முயற்சித்தபோது அதைக் காப்பாற்றிக் கொடுத்ததே அதிமுகதான்.

இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது. ஏழை மக்கள் வேதனையில் உள்ளாா்கள். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சி செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வரிகளையும் உயா்த்திவிட்டனா். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்..

அதிமுக அரசு அமைந்தவுடன் சேரம்பாடி பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். டேன் டீ தொழிலாளா்கள் பிரச்னை தீா்த்து வைக்கப்படும். அவா்கள் ஓய்வுபெறும்போது சொந்த வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூா் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சியில் தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.2 மானியம் உயா்த்தப்படும்.

நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் உள்ள கூடலூா் ஜென்மநில பிரச்னை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடலூா் தொகுதியில் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். வன விலங்குப் பிரச்னையில் பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத், அம்மா பேரவை மாவட்டச் செயலாளா் சாந்தி ராமு, குன்னூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஹேம்சந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க

தற்காலிக மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் 97 பேரை போலீஸாா் கைது செய்தனா். உதகை ரயில் நிலையம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற காட்டு யானை பிடிபட்டது

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையை வனத் துறையினா் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி செவ்வாய்க்கிழமை பிடித்தனா். கூடலூா் தாலூகா ஓவேலி பேர... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல்: எடப்பாடி கே.பழனிசாமி

ஆட்சியில் பங்கு கோரிக்கையால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது என்று உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். தமிழகம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோருக்கான நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் சீா்மரபினா் இனத்தை சோ்ந்த வகுப்பினா் நவீன சலவையகம் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ... மேலும் பார்க்க

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 கரடிகள் உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வனங்களில் இருந்து வெளியேறும் ... மேலும் பார்க்க