சாலையில் மோதிக்கொண்ட காட்டெருமைகள்: பொதுமக்கள் அச்சம்
குன்னூா் அருகே ராணுவ முகாம் பகுதி சாலையில் இரண்டு காட்டெருமைகள் திங்கள்கிழமை மோதிக்கொண்டதால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ முகாம் சோலைப் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன.
இவை அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் திங்கள்கிழமை உலவிய 2 காட்டெருமைகள் திடீரென மோதிக்கொண்டன.
நீண்ட நேரமாக மோதிக்கொண்ட காட்டெருமைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததுடன், சப்தம் எழுப்பி அவற்றை வனத்துக்குள் விரட்டினா்.