ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!
சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சுதாகரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை!
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான சுதாகரனிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் விசாரணைக்காக ஆஜரானார்.
அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டு அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த சுதாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசியதாவது,
தன்னிடம் நாற்பது கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விசாரணை நன்றாக இருந்தது எனவும் தெரிவித்தார். கேட்ட கேள்விக்கு தனக்குத் தெரிந்த உண்மையைத் தெளிவாகக் கூறிவிட்டேன் என்றும், முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் எனவும் விசாரணை தீவிரமடைந்துள்ளதா, உண்மை வெளிவருமா என்பது குறித்துத் தெரியவில்லை எனவும் பதிலளித்தார்.
மேலும் விசாரணைக்காக வந்துள்ளேன் விசாரணை முடிந்து விட்டது கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளேன். விசாரணை முறையாக நடந்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இதைக் கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள் எனப் பதில் அளித்துச் சென்றார்.